மனுஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீளப் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரியாவுக்கான ஈ 8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையில், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, மனுஷ நாணயக்கார இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அனுமதி கோரல்
இந்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மனுஷ நாணயக்காரவின் சட்டத்தரணிகள் அனுமதி கோரினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் லக்மாலி கருணாநாயக்க, இந்த மனுவைப் பராமரிக்க முடியாது எனக் கூறி ஆரம்பத்திலேயே ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |