மாற்றுத் திறனாளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி: விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட பார்வை அற்றோர் அறக்கட்டளையின் பொருளாளர் அப்புத்துரை கடம்பன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (08.04.2024) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாதாரணமான விளையாட்டுக் கழகங்கள், செலவு நிலையங்கள், முன்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் எல்லாவற்றிற்கும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்றன.
சாதகமான பதில்
ஆனால், நாங்கள் இரண்டு தடவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்தும் இந்த விடயம் இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
இறுதியாக இடம்பெற்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை நாம் நம்பி இருந்தோம். ஆனால் வாக்குறுதிக்கு மாறாக எங்களுக்கு சாதகமான பதில் இதுவரை கிடைத்ததில்லை.
திறன் விருத்தி கண்காட்சி
யாழ். பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையம், இந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தந்தை செல்வா திரையரங்கில் ஒரு திறன் விருத்தி கண்காட்சியை நடத்த இருக்கிறது.
பொதுமக்கள், மாணவர்கள், அரச நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டிய ஒரு சிறந்த நிகழ்வாக இது அமைய இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |