தமிழ் தலைமைகள் குறித்து அமெரிக்க தூதுவரின் நிலைப்பாடு: சிறீதரன் தகவல்
தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றைய(15.05.2024) சந்திப்பு தொடர்பில் அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
"தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்த தமிழ்கட்சிகள் பிளவு பட்டு இருக்கின்றன. அதே போல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நீதிமன்ற வழக்கு காணப்படுகிறது.
இவ்வாறு தமிழ் கட்சிகள் பிளவுபடாது ஒன்றிணையும் போதே பலமாக முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிஸார் பொது மக்களை கைது செய்யும் விடயங்கள் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam