யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி
யாழில் "யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கண்காட்சியானது இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (07.04.2024) யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நடைப்பெற்றுள்ளது.
கண்காட்சி நிகழ்வு
குறித்த கண்காட்சியில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற நல்லூர் ஆலயம், யாழ்ப்பாண கோட்டை, நெடுந்தீவு உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரபல்யமான பல இடங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக, திட்டமிடல் வரலாற்றுத்துறை மற்றும் தொல்பொருள்துறை மாணவர்கள் 14 பேரும், நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் இணைந்துள்ளனர்.
இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் கண்காச்சியினை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnnie Horbaach, இந்திய துணைத் தூதராக தூணைத் தூதுவர் சாய் முரளி, யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் வருகைதந்து பார்வையிட்டுள்ளனர்.