எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!(photos)
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
திருகோணமலை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடல் தொழிலுக்குச் செல்வதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

திருகோணமலை - திருக்கடலூர், புல்மோட்டை, நிலாவெளி மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள், வள்ளங்கள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலகுவான வழிமுறைகள்
கடற்றொழிலாளர்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருந்தாலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மீன்பிடித்திணைக்களம் இலகுவான வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
விஜய் ரசிகர்களை பற்றி சிவகார்த்திகேயன் பதில்! சுதா கொங்கரா பேச்சு சர்ச்சையான பின் விளக்கம் Cineulagam