இலங்கையை இன்று வந்தடையும் பாரிய எரிபொருள் கப்பல்! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
40,000 மெட்ரிக் டொன் எரிபொருளை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வந்து சேரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 32,000 மெட்ரிக் டொன் டீசலும், 8,000 மெட்ரிக் டொன் விமான எரிபொருளும் அடங்கும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே கூறியுள்ளார்.
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
இதேவேளை,நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு அதிகளவு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இரண்டு கப்பல்கள் ஏப்ரல் 6-7 மற்றும் 7-8 ஆகிய திகதிகளில் நாட்டை வந்தடையும் என்றும் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்கான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பண்டிகைக் காலத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் நெத்திகுமரகே உறுதியளித்துள்ளார்.