இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை(2) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இதன் மையப்புள்ளி இந்தோனேஷியாவின் டெர்னேட் நகரத்திலிருந்து மேற்குப்-வடமேற்கு திசையில் சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாக USGS தெரிவித்துள்ளது.

நிலநடுக்க மையப்பகுதியைச் சுற்றியுள்ள 1,000 கிலோமீட்டர் பரப்பளவில் குறிப்பாக இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அலைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை முறைமை எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தோனேஷியாவின் சில கடற்கரைப் பகுதிகளில் கடல் மட்டத்தை விட 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் (சுமார் 3.2 அடி) உயரம் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இதற்கிடையில், குவாம், ஜப்பான், மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் 30 செ.மீ.க்கு குறைவான அளவில் அலைகள் இருக்கலாம் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் பின்னர் அது 7.4 ஆக திருத்தப்பட்டதாகவும் USGS தெரிவித்துள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், ஜப்பான் கடற்கரைப் பகுதிகளில் “சிறிய அளவிலான கடல் மட்ட மாற்றங்கள்” ஏற்படக்கூடும் என்றும், ஆனால் சுனாமி சேதம் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு நிறுவனம், அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பு, தீவுகள் மற்றும் அதன் பிரதேசங்களுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 31 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam