குறைக்கப்பட வேண்டிய நேரத்தில் திருத்தம் செய்யப்படாத எரிபொருள் விலை! எழுப்பப்படும் தொடர் கேள்விகள்..

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Mujibur Rahman Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Rakesh Jun 22, 2026 06:03 AM GMT
Report

நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசால் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாமல் போயுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

வரிச்சுமை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

"அரசு மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தி அவர்களைப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளமையால் மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

நல்லாட்சி அரசின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய அரசு மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு சூத்திரமாக மாற்றியமைத்துள்ளது.

குறைக்கப்பட வேண்டிய நேரத்தில் திருத்தம் செய்யப்படாத எரிபொருள் விலை! எழுப்பப்படும் தொடர் கேள்விகள்.. | Fuel Prices Increased In Sri Lanka

மத்தியக் கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி, எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கான புதிய சுரண்டல் முறையொன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 75 முதல் 80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு வழங்கி, உள்நாட்டிலும் எரிபொருள் விலையைக் குறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், விலையைக் குறைக்க முடியாது என்றே அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்தியக் கிழக்கு யுத்தம் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த போது இலங்கையிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று ஜனாதிபதி மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார்.

அவ்வாறாயின், புதிய எண்ணெய் கப்பல்கள் எதனையும் இறக்குமதி செய்யாமல், பெப்ரவரி மாதத்தில் 67 டொலர்களுக்கு வாங்கிய பழைய இருப்புக்கே மார்ச் மாதத்தில் மட்டும் அரசாங்கம் நான்கு முறை எரிபொருள் விலையை அதிகரித்தது.

ஆனால், தற்போது உலகச் சந்தையில் விலை குறைந்துள்ள போது, அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறி விலையைக் குறைக்க மறுக்கின்றது.

பெப்ரவரி 28 இற்குப் பின்னர், 92 ஒக்டேன் பெட்ரோல் 142 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் 155 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 126 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 146 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை 

ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வரிக்குறைப்பு மூலம் நிவாரணம் வழங்கப்படுகின்றது.

ஆனால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் என்றும், கமிஷன் பெறப்படுவதாகவும் கூறினார்கள். அப்படியாயின் இப்போது அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குறைக்கப்பட வேண்டிய நேரத்தில் திருத்தம் செய்யப்படாத எரிபொருள் விலை! எழுப்பப்படும் தொடர் கேள்விகள்.. | Fuel Prices Increased In Sri Lanka

அதேபோல், மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 'டித்வா' திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது என்று டில்வின் சில்வா கூறிய கருத்து தனக்குத் தெரியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தியை பிரதமர் பார்க்கவில்லை என்பதை ஏற்க முடியாது. டில்வின் சில்வாவுக்கு எதிராகப் பேசப் பயந்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். தனது பிரதமர் பதவி பறிபோய்விடும் என்ற பயத்திலேயே பிரதமர் வாழ்கின்றார்.

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர்கள் இருக்கும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு நிதியமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே பாரிய போராட்டத்தை நடத்தியது.

ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நடந்த அநீதி குறித்து சஜித் பிரேமதாஸவே பேசினார்.

அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து அன்று பேசவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தராதரமின்றி சட்டம் நிலைநாட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

யோஷிதவின் கைது நடவடிக்கையின் பின்னணி - மகிந்தவின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்

யோஷிதவின் கைது நடவடிக்கையின் பின்னணி - மகிந்தவின் அதிகார துஷ்பிரயோகம் அம்பலம்

தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! ரணில் - சஜித் திடீர் சந்திப்பு

தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! ரணில் - சஜித் திடீர் சந்திப்பு

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US