எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சிறிது குறைந்துள்ளதையும் அவதானிக்க முடிவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிக்கும் அபாயம்..
அதேவேளை, அமெரிக்க - ஈரான் இடையே அதிகரித்து வரும் முறுகல் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டிட்வா புயலை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு, ஈரான் - அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றம் ஒரு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam