உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பலியானோர் குறித்து ரஷ்யா வெளியிட்ட தகவல்
உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியான கெர்சன் (Kherson) மாகாணத்தில் உள்ள ஒரு விடுதி மற்றும் உணவகத்தின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 27 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
கருங்கடல் பகுதியில் உள்ள 'கோர்லி' (Khorly) கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கெர்சன் மாகாண ஆளுநர் விளாடிமிர் சால்டோ (Vladimir Saldo), இந்தத் தாக்குதல் குறித்துக் கூறுகையில், மூன்று ஆளில்லா விமானங்கள் கடற்கரையோரம் உள்ள விடுதி மற்றும் கஃபேயைத் தாக்கியுள்ளன.
பயங்கரவாதத் தாக்குதல்
இந்தத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நேரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு சிறுவனும் அடங்குவதாகவும், இது பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட "பயங்கரவாதத் தாக்குதல்" என்றும் ரஷ்யா சாடியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்துள்ள உக்ரைன், தாங்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின்படியே செயல்படுவதாகவும், இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் பாதுகாப்புப் படை வட்டாரங்கள், அங்கு ஒரு தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால், அந்தத் தாக்குதல் பொதுமக்களுக்கான இடம் அல்ல என்றும், ரஷ்ய ராணுவத்தினர் குழுமியிருந்த இடத்தையே இலக்கு வைத்ததாகவும் அவை கூறியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்த புகைப்படங்களில் ஒரு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதும், பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த முயற்சிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam