மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு - செய்திகளின் தொகுப்பு
இம்மாத இறுதியில் இருந்து எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிபொருளின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என கூறப்பட்ட போதிலும் தற்போது விலை அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிபொருளில் புதிதாக 18% வற் வரி சேர்க்கப்பட உள்ளதாகவும், ஆனால் எரிபொருளில் இருந்து 8% துறைமுக கட்டணங்கள் நீக்கப்பட்டதால், எரிபொருள் விலை 10% மட்டுமே அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




