கோட்டாவின் நிலையே கஞ்சனவிற்கும் ஏற்படும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை (Video)
எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்சவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாயினும் கூறியதை போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
