சடுதியாக குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை!
புதிய இணைப்பு
சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
அத்துடன் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் சினோபெக் நிறுவனம் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.
முதலாம் இணைப்பு
எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம்
இதனடிப்படையில், 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
