நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் தற்போது எரிபொருள் தொடர்பான பல்வேறு நெருக்கடி நிலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியாவில் உள்ள பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று(22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும், இன்று(23) காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேவையற்ற அச்சம்..
அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ள போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினாலும், கையிருப்பில் இருந்த எரிபொருள் நிறைவுற்ற நிலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.




மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை