எரிபொருள் நெருக்கடியால் நீதித்துறையிலும் மாற்றம்! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை முடிந்தவரை இணையவழி தளங்கள் ஊடாக முன்னெடுக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிவான்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் ஒன்று நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் போது, அவர்களை நேரடியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதைத் தவிர்த்து, இணையவழிக் காணொளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றுநிரூபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கை
வழக்கமான சூழலில் நேரடி விசாரணைகள் அவசியம் என்ற போதிலும், தற்போதைய அசாதாரண சூழலில் நீதிவான்கள் பின்வரும் விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் சட்டத்தரணிகள், வழக்குதாரர்கள் மற்றும் சாட்சியாளர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டால் நீதிமன்றுக்கு வருவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எரிபொருள் நெருக்கடியால் நீதிமன்றுக்குச் சமுகமளிக்க முடியாத எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒவ்வொரு வழக்கின் தன்மையையும் ஆராய்ந்து நீதிவான்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இந்தச் சுற்றுநிருபம் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சிக்கல்களால் நீதித்துறை நடவடிக்கைகள் முடங்குவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam