எதிர்க்கட்சிகளின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை.. ஜெகதீஸ்வரன் எம்பி கடும் சாடல்
சீரான முறையில் நாட்டு மக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர்க்கட்சியினர் சிறு பிள்ளை தனமாக கருத்துக்களை முன்வைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கையிருப்பு
மக்கள் பதற்ற மடைந்து அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்கவும், செயற்கையான தட்டுப்பாட்டை தடுக்கவும் நேற்று முதல் QR முறையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை அடுத்த மூன்று நாட்களுக்கு இ.போ.ச (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.வடமாகாணத்தில் அரச அதிபர் பணிமனைக்கு அருகே உள்ள எரிபொருள் நிலையங்களில் பேருந்துகளுக்கு டீசல் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விவசாய நடவடிக்கைகளுக்காக வாரத்திற்கு 25 லிட்டர் எரிபொருள் டிராக்டர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா போன்ற மாவட்டங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை பணிகள் நடைபெறுவதால், மேலதிக எரிபொருள் தேவை குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam