எரிபொருள் கையிருப்பு எவ்வளவு நாட்களுக்கு போதுமானது! அமைச்சரின் அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அரசாங்க அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையில் நாட்டில் எரிபொருள் கையிருப்பு உண்டு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டு காலம் வரையில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவே ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் எரிபொருள் தொடர்பில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பிமல் ரத்னநாயக்க சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு சில உலகத் தலைவர்களின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் இன்று உலகமே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
போர் மோகத்தில் ஒன்றிரண்டு தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று குண்டு வீசி அழிவுகளை ஏற்படுத்துகின்றனர் என அவர் அண்மைய உலக போர் நிலைமைகளை விமர்சனம் செய்துள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri