இன்று இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்.. எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு
கொலன்னாவை மற்றும் பிற டிப்போக்களில் இருந்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று காலை முதல் வழக்கம் போல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் இருப்பு தீர்ந்து போன அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று பிற்பகலுக்குள் தேவையான எரிபொருள் இருப்புக்கள் கிடைக்கும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
QR குறியீட்டின் படி எரிபொருள் விநியோக அமைப்பில் ஏற்பட்ட சிறிய சிக்கல்கள் காரணமாக நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
03 எரிபொருள் கப்பல்கள்
இதற்கிடையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தம்புள்ளை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று காலை எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் மேலும் 03 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு நடைமுறைபடுத்தப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri