பழங்களை ஏற்றிச் சென்ற வண்டி விபத்து! இரண்டு பேர் காயம்
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்து இன்று(16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் – ஸ்த்ரெதன் தோட்டம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இரண்டு பேர் காயம்
ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து ஆணைக் கொய்யா பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில் ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது கெப் வாகனத்தில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri