இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்
இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரித்தானிய(UK) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இடம்பெற்றன.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
பிரித்தானியாவின் கடமை
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதித்ததுடன் பிரித்தானியாவின் கடமை முடியவில்லை. பிரித்தானியா இன்னும் அதிக பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது' என மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள்
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மக்டோனா, 'பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் நாங்கள் துணையாக உள்ளோம்.
இலங்கையின் விடயத்தில் பிரிட்டன் தனது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
