தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By H. A. Roshan May 16, 2025 09:45 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது.

வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்நிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழின படுகொலை

இன்று (16) காலை 10.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

"உடல் சிதைந்து உயிர் மடிந்த குருதியில் நனைந்து போன நிலம் மறந்து போகுமா? முள்ளிவாய்க்கால்" என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

 நினைவஞ்சலி 

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி பூ தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

 தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம்(16) சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

 இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், திரு.ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day]

திருகோணமலை 

நிகழ்வு கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றையதினம்(15) திகதி, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில், காலை 9.00 மணியளவில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஆனையிறவில் தொடரும் போராட்டம் : பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

ஆனையிறவில் தொடரும் போராட்டம் : பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி

நிகழ்வில் மொத்தம் 39 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாது, நீதி தேடும் ஒரு சமூக அழைப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

வைத்தியசாலையில் நடந்த துயர சம்பவம் - பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

வைத்தியசாலையில் நடந்த துயர சம்பவம் - பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

பருத்தித்துறை முனைக் கடற்கரை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நேற்று பருத்தித்துறை முனை கடற்கரையில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

இதில் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

வல்வெட்டித்துறை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று(15) வியாழக்கிழமை வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

அஞ்சலி 

விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கியுள்ளனர்.

இதன் போது இறந்த எம் உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழ் தேசிய மக்கள் முன்னனி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை , 3 ஆம் கட்டை சந்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர்களால் வியாழக்கிழமை (15) முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு நினைவஞ்சலி நிகழ்வும் இடம் பெற்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக இடம் பெற்றதுடன் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

 பொதுச்சுடர் 

கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு நாளில் எமது உறவுகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் ஆறாவது நாள் விசுவமடு சுண்டைகுளம் சந்தி பகுதியில் வர்த்தகர்கள் இளைஞர்கள் இனைந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

இதன் போது இறந்த எம் உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுமுள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | May 18 Mullivaikal Memorial Day

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US