கல்முனையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி
கல்முனை 'ஸஹ்ரியன் 90' அணியினருக்கும் ஸஹ்ரியன் பவர் பிளேயர் 96 அணியினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியானது, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஸஹ்ரியன் பவர் பிளேயர் 96 அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
வெற்றியீட்டிய பவர் பிளேயர் 96
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் பிளேயர் 96 அணி, நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றுள்ளது.
127 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய 'ஸஹ்ரியன்ஸ் 90' அணியினர் 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |