மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்
மட்டக்களப்பு (Batticaloa) விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்துள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் (26.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
சடங்கு உற்சவம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள விளாவட்டவான் கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்திலுள்ள ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய சடங்கு உற்சவம் கடந்த 23ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து, சிறப்பான முறையில் இடம்பெற்ற அம்பாளின் சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (26.05.2024) மாலை பள்ளயப்பூசை, ஆகாய பேச்சிக்கு மடைப்பூசை கொடுத்தல் மற்றும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |