உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ள வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை ஒரு சில தொடர்பாடல் சாதனங்களில் உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மில்லியன் கணக்கான பயனர்களின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
We’re aware that a technical issue is impacting some users’ ability to access our apps. We’re working to get things back to normal as quickly as possible and apologize for any inconvenience.
— Meta (@Meta) December 11, 2024
இந்நிலையில் இதன் தாக்கம் இரவு 11:29 மணியளவில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
பயனர்கள் பாதிப்பு
இதன்படி இன்ஸ்டாகிராம் பயனர்கள் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது எனவும் WhatsApp மூலம் அழைப்புகளைச் செய்யவோ அல்லது இணையத்தை அணுகவோ முடியாது என்றும் கூறப்படுகிறது.
IST, Android, iOS மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை இது பாதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |