ஹோர்முஸ் நீரிணையில் குறிவைக்கப்பட்ட பிரான்ஸ் கப்பல் : பல மாலுமிகள் காயம்
ஹோர்முஸ் நீரிணையில் நேற்று(05.05.2026) தங்களது சரக்குக் கப்பல்களில் ஒன்று குறிவைக்கப்பட்டதில், அதில் இருந்த பணியாளர்கள் காயமடைந்ததாகவும், கப்பல் சேதமடைந்ததாகவும் பிரெஞ்சு கப்பல் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
CMA சான் அன்டோனியோ கப்பல் நேற்று நீரிணையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது பெரிய கொள்கலன் கப்பல்
காயமடைந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய கொள்கலன் கப்பல் நிறுவனமான பிரெஞ்சு நிறுவனம், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியபோது அதன் 14 கப்பல்கள் வளைகுடாவில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, மால்டா கொடியை ஏந்திய சான் அன்டோனியோ கப்பலின் சேருமிடம் இந்தியாவில் உள்ள முந்த்ரா எனக் குறிக்கப்பட்டுள்ளது.
you may like this
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam