அவசரகால சட்டத்தின் ஊடாக கருத்து சுதந்திரத்தை வரையறுக்க முடியாது – நீதவான் தெரிவிப்பு
அவசரகால சட்டத்தின் ஊடாக கருத்து சுதந்திரத்தை வரையறுத்து விட முடியாது என மாத்தறை பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் உறுதி செய்யப்பட்டுள்ள மனித உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தை அவசரகாலச் சட்டத்தை கொண்டு ஒடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்தும் போது ஆளும் கட்சிக்கு ஒருவிதமாகவும், எதிர்க்கட்சிக்கு மற்றுமொரு விதமாகவும் அமுல்படுத்தப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் அரசியலை செய்யாது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தி அக்குரெஸ்ஸ பொலிஸாரினால் ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமுத்திய வழக்கிலிருந்து குறித்த ஜே.வி.பி உறுப்பினர்களை நீதவான் விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.