மன்னாரில் இலவச மருத்துவ முகாம்..!
மன்னார் உப்புக்குளம் பகுதியில் இலவச மருத்துவ முகாமொன்று இன்றைய தினம் (17) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes),தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள். பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள், ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) (Breathing Problems) சுவாசப் பிரச்சினைகள், இரத்த அழுத்தம் (Blood pressure.உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இலவச மருத்துவ முகாம்
மேலும் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் வைத்தியசாலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு புத்தகத்தை (Clinic book) கொண்டு வர வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி கண் நோயாளருக்கு வழங்கப்படுகின்றது. குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
குறித்த மருத்துவ முகாம் நாளை செவ்வாய்க்கிழமை(18) விடத்தல்தீவு புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்திலும், புதன்கிழமை (19) இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்..! மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற அனுமதி


