சிறையில் நாமல் ராஜபக்ச - கட்சிக்குள் சிக்கலான சூழ்நிலைகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பணிகளை தொடர்வதில் சில சிக்கலான சூழ்நிலைகள் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கட்சியை யார் வழிநடத்திச்செல்வது, அச்செயல்பாடுகளில் அவர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்து தொடர்ச்சியாக சிக்கல்கள் தொடருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் குழு
இதன்படி, பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் குழுவொன்று கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த குழுவில் இருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்னெடுத்துச்செல்லவும் தலைவர்களாக ஏற்று முன்னிறுத்தலாமா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைகளும் விவாதங்களும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை உறுதிப்படுத்தப்பட்டு கட்சி தலைவர்களின் ஆசீர்வாதங்களையும், ஒப்புதலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே, கட்சியை தடையின்றி எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்த விவாதம் தொடர்வதால் கட்சிக்குள்ளும் சில கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.