விஹாரமஹா தேவி பூங்காவில் தொடரும் அமைதியின்மை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
குறித்த பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உத்தரவினை பெற்றுள்ளனர்.
அமையின்மை
குருந்துவத்த பொலிஸ் பொறுப்பாசிரியரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வரும் வணக்கத்துக்குரிய உலப்பனே சுமங்கல தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகளுக்கும், அத்துடன் செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகத்தையும், எஃப்.ஆர். சேனநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா ரவுண்டானா, தர்மபால மாவத்தை, கண்ணங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ஃபிளவர் வீதி உள்ளிட்ட நடைபாதைகளையும் வீதிகளையும் மறிப்பதைத் தவிர்க்குமாறு நீதிமன்ற உத்தரவில் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்
மால் (Mall Road) வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்பும், விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலையைச் சுற்றியும் தொடர்ந்து இருப்பவர்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, 1979 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் எண் 15 இன் பிரிவு 106(1) இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸாருக்கு அதன் பிரிவு 106(3) இன் படி தொடர்புடைய உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அதிகாரம் உள்ளது.
இந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 185 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு