ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமூலம் ஊடாக, ஊடக சுதந்திரம் பாதிக்கப்படும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக அமைப்பினால் இது தொடர்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அமைப்பு இந்த விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. குறித்த சட்ட மூலமாக அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக நெறிமுறைகளையும் பாதிக்க கூடிய வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த சட்டம் மூலம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது அல்ல என சவால் விடுக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான உதய கலுபத்திரன மற்றும் ஹானா இப்ராஹிம் ஆகிய இருவரும் இது தொடர்பிலான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் உத்தேச சட்டம் மூலம் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.