இலவச கண்சிகிச்சை திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில்(Photos)
வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை நடத்தப்படுகிறது.
இந்திய வைத்தியர்களின் வருகை
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று வைத்தியர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய துணை தூதரக உதவி
மலேசியாவின் தனியார் நிதியம் ஒன்றின் அனுசரணையுடன் இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.
அத்தோடு இந்திய துணை தூதரகம், சுகாதார அமைச்சு ஆகியனவும் இந்த திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உதவி நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
