விடுதலைப் புலிகளின் தலைவர் மீள வருவாராக இருந்தால் அது அதிரடியாக இருக்கும்! சாணக்கியன் (Video)
உண்மையிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் வருகின்றார்கள் என்றால் அது அதிரடியாகத் தான் நிகழும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு நாங்கள் தயாராகும் போது ஏதாவது ஒரு புதிய பிரச்சினை, புரளி, சர்ச்சை உருவெடுக்கும்.
இந்த வருடம் துவாராகவின் உரை என்று கூறி ஒன்று வெளிவந்தது. அது உண்மையோ பொய்யோ நாங்கள் கண்ணால் காணவில்லை. எனினும், தொழிநுட்பவியலாளர்களால் தான் அதனை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.
அதேபோல கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரப் போகின்றார் என்ற ஒன்று பேசப்பட்டது.
உண்மையிலேயே, தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் வருகின்றார்கள் என்றால் அது அதிரடியாகத் தான் நிகழும்.
உண்மையிலேயே அதனைக் கூறிய பழ.நெடுமாறன் ஐயா ஒரு மூத்த அரசியல்வாதிதான். அவர் சொல்லியிருந்தார் ஒரு ஊடகச் சந்திப்பில்.
ஆனால் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றார்கள் என்றால் அது அதிரடியாகத் தான் நிகழும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
