இரகசிய கடற்படை முகாமில் சித்திரவதை: சிஐடி விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி

Sri Lankan Tamils Sri Lanka Final War Sri Lanka Navy
By Parthiban.A Dec 18, 2023 05:28 PM GMT
Parthiban.A

Parthiban.A

in சமூகம்
Report

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் ஒரு நபரை கடத்தி அவரை இரகசிய கடற்படை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அண்மையில் கைது செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேரலாலகே சாந்த சமரவீர என்பவரை 2010 ஜூலை மாதம் பொலிஸ் பரிசோதகர் சமன் குமார திஸநாயக்க கடத்தி சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சவேந்திர சில்வா ஊடான இந்தியாவின் இரகசிய நகர்வு (Video)

சவேந்திர சில்வா ஊடான இந்தியாவின் இரகசிய நகர்வு (Video)

நீதிக்கான சர்வதேச செயல்திட்டம்

காணாமல் போன சமரவீர கடைசியாக, திருகோணமலையில் கடற்படை புலனாய்வாளர்களால் நடத்தப்படும் அடர்ந்த காடுகள் பரந்த மலைகளில் அமைந்துள்ள ஒரு இரகசிய தடுப்பு முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயல்திட்டம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.

இரகசிய கடற்படை முகாமில் சித்திரவதை: சிஐடி விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested

யுத்தத்தின் இறுதிகாலப் பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகரிலிருந்து 11 பேர் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பில் கவனம் செலுத்திய அந்த அறிக்கை, அவர்கள் காணாமல் போவதற்கு முன்னர் - கன்சைட் தடுப்பு முகாம் - அல்லது ‘கோட்டா முகாம்’ என்ற இடத்தில் கடற்படையால் கைது செய்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு நம்பத்தகுந்த சான்றுகள் உள்ளன என்று விபரித்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை, பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் மற்றும் உள்ளக தகவல்கள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் குறித்த விபரங்கள் வெளியாயின.

அதில் ஒருவர் கேகாலை எக்கிரியாகலவைச் சேர்ந்த சாந்த சமரவீர மற்றொருவர் குருநாகல் இப்பாகமுவப் பகுதியச் சேர்ந்த நிசாலன்சல விதாரணராட்சி.

அதே கன்சைட் முகாமில் கடற்படை புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒரு நபரான பஸ்நாயக்க முதலியன்சலாகே விஜயகாந்த், அங்கு ஒரு வருடம் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இந்த இருவரும் தன்னுடன் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர் என குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவினரிடம் நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மீள வருவாராக இருந்தால் அது அதிரடியாக இருக்கும்! சாணக்கியன் (Video)

விடுதலைப் புலிகளின் தலைவர் மீள வருவாராக இருந்தால் அது அதிரடியாக இருக்கும்! சாணக்கியன் (Video)

கடற்படையின் கூட்டுச் சதி 

எனினும், இலங்கை பொலிஸார் எந்த சந்தேகநபரை இதுவரை கைது செய்யவில்லை.

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடரில் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கும் இடையே இருக்கும் அபாயகரமான தொடர்பை பொலிஸாரே வெளிப்படுத்துவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும்.

இரகசிய கடற்படை முகாமில் சித்திரவதை: சிஐடி விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested

எனினும், இப்படியான தொடர்பு குறித்து அதிகாரிகள் வாய் திறக்கவில்லை. உண்மை மற்றும் நீதி செயற்றிட்டத்தின் ‘இலங்கை கடற்படை: கூட்டாகக் கண் மூடி மௌனம்’ அறிக்கையில் , ஆட்களைக் கடத்தி கப்பம் பெறும் திட்டமிட்ட நடவடிக்கையில் பொலிஸும் கடற்படையின் கூட்டுச் சதி இருந்திருக்கக் கூடும் சாத்தியத்தையும் ஆராய்ந்தது.

2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்த சமரவீரவின் மூத்த சகோதரி லலிதா ஜயசிங்க தனது சகோதரர் காணாமல் போனமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அவர் 22 ஜூலை 2010 அன்று அலவ்வ பொலிஸால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குடும்பத்தார் 25ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை - சட்டத்தரணி சூல சஞ்சீவ அதிகாரியுடன் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

ஆரம்பத்தில் சாந்தவை தாங்கள் தடுத்து வைக்கவில்லை என்று மறுத்தனர், எனினும் சட்டத்தரணி தலையிட்டவுடன் அவரை முன்நிறுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவி

பின்னர் லலிதா ஜயசிங்கவிடம் அவரது சகோதரர் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் கூறினர்.

ஆனால், துரதிஷ்ட வசமாக அது நடைபெறவில்லை. ’’பின்னர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு ஒரு செய்தி கிடைத்தது.

இரகசிய கடற்படை முகாமில் சித்திரவதை: சிஐடி விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested

பின்னர் நாங்கள் அங்குச் சென்ற போது, எனது சகோதரர் கழிப்பறையில் இருந்த ஜன்னல் மூலம் தப்பித்தார் என அவர்கள் கூறினர்.

அவர் ஜூலை 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அவர் பொலிஸ் நிலையத்திலும் இல்லை அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் இல்லை.

அநாதரவான நிலையில் லலிதா ஜயசிங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடினார்.

“விசாரிப்பதற்காக நாங்கள் பல முறை அந்த ஆணைக்குழுவிற்குச் சென்றோம். ஒவொரு முறையும் அவர்கள் பொலிஸாருக்கு சார்பாகவே நடந்துகொண்டனர்.”

யாழில் நடைபெறவிருந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

யாழில் நடைபெறவிருந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

நீதிமன்ற விசாரணை

சாந்த சமரவீர காணாமல் போனது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டதாக அறிக்கை எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

இரகசிய கடற்படை முகாமில் சித்திரவதை: சிஐடி விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested

கடந்த 2008 - 09 ஆண்டுகளில் கடத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் கன்சைட்டில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில், இலங்கையில் மிகவும் மதிப்பளிக்கப்பட்ட கடற்படைத் தளபதியான வசந்த ஜயதேவ கரணாகொட ஒரு முக்கிய சந்தேகநபராக உள்ளார்.

கடந்த 2021இல், இலங்கையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பித்து வெளியேறினார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US