சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குறித்து பிரான்ஸ் எடுத்துள்ள தீர்மானம்
பிரான்சில் (France) உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வறுமையிலிருக்கும் பிரான்சின் மயோட் (Mayotte) எனப்படும் தீவுகளுக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடி புலம்பெயர்வோர் வருதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வறுமையில் உள்ள மயோட் மக்களுக்கு மேலும் கடினமான சூழலை அவர்களின் வருகை உருவாக்குகிறது. அதனால், அங்கு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிலவுகின்றன.
விமானங்கள் ஏற்பாடு
ஆகவே, பிரான்ஸ் அரசாங்கம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை மயோட்டிலிருந்து நாடுகடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்காக, கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு மயோட்டில் உள்ள அதிகாரிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau இந்த மாதம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை காங்கோ நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
