ஹட்டனில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் காயம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (30.10.2026) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு திசையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் பயணித்த வேன் மற்றும் அதற்குப் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி ஆகியனவும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு வாகனங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியின் கவனக்குறைவான வாகனச் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





