ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மகன்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று(31.03.2026) நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிறுவனத்தின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக, லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, நேற்று(31.03.2026) நால்வர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 5 மணி நேரம் முன்
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan