மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Supreme Court of Sri Lanka High Court of Sri Lanka Kapila Chandrasena
By Dhayani May 20, 2026 01:29 PM GMT
Report

மர்மமான முறையில் மரணமடைந்த கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்க முன்வந்த போலி பிணையாளர்கள் என கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களையும், அச்செயலுக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான முகமது ரிஸ்வான், முகமது இர்ஷாத் ஆகியோரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அரவிந்த டி சில்வாவின் அலுவலகத்தில் பணிபுரியும் அரியதிஸ்ஸ டி சில்வா மற்றும் பெருமாள் கணேஷ் ஆகியோரையும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிணையாளர்களின் வசிப்பிட உறுதி

அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்களின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Four Fake Sureties Bail To Kapila Granted Bail

மேலும், பிணையாளர்களின் வசிப்பிடத்தை சரிபார்க்க கிராம அலுவலர் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிணை தொகையை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் பத்திரங்களையும் பிணையாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இவ்வாறு பிணை வழங்குவதற்காக, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அப்பகுதி கிராம அலுவலரிடம் இருந்து 17 கிராம அலுவலர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர் என்றும் வாழைத்தோட்டம் பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிராம அலுவலரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கிராம அலுவலரின் தொலைபேசி அழைப்புகளின் விரிவான பதிவுகளை பெற்று மேலும் விசாரணைகளை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கபில சந்திரசேனவிற்கு பிணை வழங்கிய ஆதாரங்கள்

மேலும், சந்தேகநபர்கள் வேறு வழக்குகளிலும் இதேமுறையில் பிணை பெற்றுள்ளார்களா, நீதிமன்றத்தில் முன்னிலையாகி தப்பித்துள்ளார்களா, அவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை நடத்தப்படும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த சந்தேகநபரான கபில சந்திரசேனவிற்குப் பிணை வழங்க முயன்றதற்கும், அதற்கு உடந்தையாக இருந்ததற்கும் நேரடி ஆதாரங்கள் உள்ளதாகவும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Four Fake Sureties Bail To Kapila Granted Bail

இதன்போது போலி பிணையாளர்கள் என்று கூறப்பட்ட இரு நபர்களுக்காக முன்னிலையான வழக்கறிஞர்,

தனது கட்சிக்காரர்கள் ஒருபோதும் பிணைப்பத்திரத்தில் கையெழுத்திடவில்லை என்றும், ஒருவர் பிணைத்தாரராவதற்கு பிணைப்பத்திரத்தில் கையெழுத்திடுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், தனது கட்சிக்காரர்கள் அத்தகைய பிணைப்பத்திரத்தில் கையெழுத்திடாததால், அவர்களை பிணைத்தாரர்களாக கருத முடியாது என்று கூறியுள்ளார்.

தங்கள் கட்சிக்காரர்கள் குற்றம் இழைத்ததற்கான எந்த ஆதாரத்தையும் பொலிஸார் இதுவரை முன்வைக்காததால், அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறும் வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்! ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்! ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

இவ்வழக்கில் மற்றொரு சந்தேகநபரான பெருமாள் கணேஷுக்காக முன்னிலையான வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சுமார் 22 ஆண்டுகளாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவிடம் பணியாற்றி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனக்கு கபில சந்திரசேனவைத் தெரியும் என்றும், அவருக்காக பிணைத்தொகை செலுத்த நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Four Fake Sureties Bail To Kapila Granted Bail

மேலும், அவர் எந்தவொரு சட்டவிரோத செயலையும் செய்தார் என்பதற்கு நீதிமன்றத்தில் எந்த ஆதாரத்தையும் பொலிஸார் சமர்ப்பிக்காததால், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, ஜூன் 25 ஆம் திகதி மீண்டும் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு



1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US