காத்தான்குடியில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வியாபரி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) இடம்பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட நால்வரும் 120 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜஸ் போதை பொருள்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனைக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு
பொறுப்பதிகாரி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஷகி உட்பட்ட குழுவினர்
சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடியில் கராச்
ஒன்றின் முதலாளியான போதைப்பொருள் வியாபாரியை 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன்
கைது செய்தனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்டவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து பிரதான வியாபாரியான காத்தான்குடியைச் சேர்ந்த பாயிஸ் என்பவரையும் அவரது உதவியாளர் உட்பட இருவரையும் பகல் 12 மணியளவில் காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றில் வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பாயிஸிடம் இருந்து 72 கிராம் மற்றும் உதவியாளரிடமிருந்து 13 கிராம் உட்பட 85 கிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாயிஸிடமிருந்து வியாபாரத்துக்காக போதைப்பொருளை வாங்கி கொண்டு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இளம் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்த 25 கிராம் ஜஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சான்று பொருட்களான கைப்பற்றப்பட்ட 120 கிராம் ஜஸ் போதை பொருள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




