தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

Jaffna TNA Mavai Senathirajah Sri Lanka
By Dharu Jan 29, 2025 09:55 PM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா யாழில் காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(29.01.2025) இரவு 10. மணிக்கு உயிரிழந்துள்ளார்.

மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

யாழ் போதனா வைத்தியசாலை

இவரது மரணம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக தொடர்பு கொண்டபோது அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவலின்படி,

''முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்ததை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம். நன்றி’’என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாவை சேனாதிராஜாவின் மரணம் தொடர்பில் தகவல் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீநேசன், கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ப. அரியநேத்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

மேலும் கடற்றொழில் அமைச்சர் இரா சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், இளங்குமரன் ஆகியோரும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். 

மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: 27.10.1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஒக்டோபர் 27 இல் பிறந்தார்.

மாவை சேனாதிராஜாவின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். 

யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.

அரசியல் பயணம்

சேனாதிராஜாவின் அரசியலை பொறுத்தமட்டில், இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

மேலும், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

இதனை தொடர்ந்து, 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ உள்ளிட்ட தரப்புடன் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 13ஆவதாக வந்து தோல்வியடைந்தார்.

எனினும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜீலை 13 படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர், 1999 ஜீலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

இதனை தொடர்ந்து 2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

மேலும், 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் வேண்டுகோளால் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியால் 2001 ஒக்டோபர் 20இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவிய பின்னர் தேர்தலில் யாழ் மாவடத்தில் போட்டியிட்டார்.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

அந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர் விடுதலைப்புலிகளை ஏகப்பிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்பதை நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் எடுத்தபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்டார்.

இதன்போது மாவை விடுதலைபுலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

ஆனந்தசங்கரி, மாவை, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோருடன் முரண்பட்டு தமிழர் விடுதலை கூட்டணியை நீதிமன்றில் நிறுத்தி தடை உத்தரவை பெற்றார். 

செப்டம்பர் , 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2024, பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியில் சிலருடைய கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாகவும் அந்த பதவியை 2024, ஜனவரி,21, ல் ஜனநாயக ரீதியாக தெரிவாக சிவஞானம் சிறிதரனை தலைவராக பதவி வகிக்குமாறும், கடிதமூலம் கோரியிருந்தார்.

சிறிதரன் தொடர்ந்தும் அடுத்த மாநாடு வரை நீங்களே தலைவராக இருங்கள் என கூறியதை ஏற்றிருந்தார்.

எனினும் சிறிதரனுக்கு தான் வழங்கிய கடிதப்பிரதியை பதில் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கத்துக்கு அனுப்பியபின்னர்.

2024, டிசம்பர்,14 அன்று வவுனியாவில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்க முற்பட்ட வேளையில் கருத்து முரண்பாடுகள், ஏற்பட்டன.

தாம் தொடந்தும் தலைவராக செயல்பட போவதாக அவர் மனம்விட்டு கேட்டபோதும் மத்தியகுழுவில் உள்ள ஒரு சாரார் விரும்பவில்லை.

மத்திய செயற்குழு கூட்டம்

இந்நிலையில் அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் 2024, டிசம்பர்,28இல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்த கூட்டத்தில் மாவை கலந்து கொள்ளவில்லை.

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Former Tna Leader Mavai Senathiraja Passes Away

அவருடைய தலைவர் பதவி சி வி கே சிவஞானத்திற்கு பதில் தலைவராக வழங்கப்பட்டது.

எனினும் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. 

எனினும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக கடந்த 2014, செப்டம்பர்,07 தொடக்கம் 2024, டிசம்பர்28, வரையும் ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராகவும்.

அதற்கு முன்னர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004, தொடக்கம் 2014, வரை 10, வருடங்கள் பதவியில் இருந்துள்ளார். 

தேர்தல் வரலாறு

1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 2,820 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.எனினும் நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைக்க போதுமானதாக காணப்படவில்லை.

2000 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 10,965 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2001 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 33,831 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2004 பொதுதேர்தலில் 38,783 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2010 பொதுதேர்தலில் 20,501 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குதெரிவு செய்யப்பட்டார்.

2015 பொதுதேர்தலில் 58,782 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குதெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 2020 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 20,358 வாக்குகளை பெற்றிருந்த போதும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US