அநுர தரப்பு மீதிருந்த கோபத்தால் சிறைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
கடந்தகால அரசாங்கங்கள் செய்த அரசியல் பழிவாங்கலை சமகால அநுர அரசாங்கமும் மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பார்வையிடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நேற்றையதினம்(18.02.2026) மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி
பழிவாங்கும் அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வது இல்லை. ஆனால் சமன் ஏக்கநாயக்க ஒரு நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி என்பதால் அவரைப் பார்க்க சிறைச்சாலைக்கு வருகைத் தந்தேன்.
மேலும், நாட்டை நடத்துவதற்கு திறமையான நிர்வாக சேவை அவசியம். அரசியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் இணைந்து செயல்படாத நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைக்கும் நடைமுறை ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

கடந்தகால அரசாங்கங்களின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து வருகின்றது.
பொது நிர்வாக சேவைக்குள் நுழைவதற்கு மிகுந்த திறமையும் தகுதியும் தேவை. சமன் ஏக்கநாயக்க போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் நாட்டிற்குத் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனது அதிருப்தியை வெளியிடும் நோக்கத்திற்காகவே தான் சிறைச்சாலைக்கு வருகைத் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam