ராஜபக்ச குடும்பத்தை நிராகரித்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொள்ளாமை குறித்து பலரது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் சந்திரிக்காவின் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது.
அத்துடன் பிறந்த நாள் விழாவில் ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புடைய எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரிக்காவின் நிராகரிப்பு
இது தொடர்பில் பலரும் சந்திரிக்காவிடம் வினவியுள்ளனர். “நான் விரும்பியவர்களை மட்டுமே அழைத்தேன்” என சந்திரிகா இது குறித்து கேட்டவர்களுக்கு பதிலளித்திருந்தார்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.
அந்தத் தேர்தலின் வெற்றி பெற்ற மகிந்த, அடுத்த வந்த காலங்களில் சந்திரிக்காவுக்கு பெரும் ஆபத்தாக மாறியதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் உடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 4 நிமிடங்கள் முன்

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
