மத ஸ்தலங்களில் அரசியல் காடைத்தனம் : அரசாங்கத்தை சாடும் நாமல்
மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இயலாமையை மறைக்க
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மத ஸ்தலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கிடைக்கும் பணத்தையும் கணக்காய்வு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டங்களையும், அப்படி கிடைக்கும் பணம் கறுப்பு பணம் என்று கூட அரசாங்கம் சொல்லும்.
இன்று அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க அரச பலத்தை பயன்படுத்தி தங்களின் அரசியலை திணிக்க முயற்சிக்கிறது.
இளைஞர் சங்கங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரண சங்கங்களிலும் அரசாங்கம் தங்களின் அரசியலை புகுத்த அரச அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
தங்களின் தவறுகளை மூடி மறைக்க அரச பணியார்களை பலிகடாவாக்குகின்றனர்.
உதாரணமாக 300 கொல்கலன்களை விடுவித்த சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளை பலிகடாவாக்கினர். ஒன்றும் செய்ய முடியாத போது தான் பழிவாங்கல் ஆரம்பமாகிறது.அரசாங்கம் அதையே இன்றும் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
