கிளிநொச்சி சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்டல் ஆற்றுப்பகுதியில் டிட்வா புயல் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
டிட்வாவில் தேங்கிய மணல்
இதன் காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் இயற்கையாகவே தேங்கி கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த மணலை டிப்பர் ரக வாகனம் மூலம் ஏற்றி எந்தவித அனுமதியும் இன்றி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.


வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri