முன்னாள் அரசியல் கைதி பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவருக்கு கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதமானது, நேற்று (10.03.2024) பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அரசியல் கைதியின் வீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
வாக்கு மூலம்
வவுனியா - தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செல்வநாயகம் அரவிந்தனுக்கே (ஆனந்தவர்மன்) இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில், எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |