ரணிலுக்கு தெரியாமல் நடைபெற உள்ள இரகசிய திட்டம்
நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரியவருகிறது.
அதில் ஆர்வமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றதை கலைக்க திட்டம்
எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களின் கலந்துரையாடலில் எழுந்துள்ள விடயங்களை கட்சி தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பசில் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், உறுப்பினர்களுக்கு தேவையெனில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை நடத்தும் திறன் அவர்களுக்கு உண்டுடென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.