ஈபிடிபியிலிருந்து வெளியேறிய முன்னாள் எம்.பி
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் (Kulasingam Thileepan) கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக நேற்று (25) அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன்.
தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள்
மேலும், 2020 இல் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.
இதுவரை, காலமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை. எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
