வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்! பியசேன கமகேவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் குறித்து ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமான நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள தகவல்
முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, தனது வருமானத்துக்கு அதிகமான முறையில் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப் பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
அத்துடன் எரிபொருள் நிலையம் உள்ளிட்ட வருமானம் அளிக்கும் பல்வேறு சொத்துக்களை பியசேன கமகே, தனது சொந்தப் பெயரில் அன்றி வேறு பெயர்களில் பதிந்து வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருந்தது.

நீண்ட விசாரணை
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிடம், சட்டவிரோத சொத்துக்கள் சேகரிப்பு விசாரணைப் பிரிவு நேற்றைய தினம் (13) ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமான நீண்ட விசாரணையொன்றை நடத்தியுள்ளது.
அத்துடன் அவரது சொத்துக்கள் மற்றும் வருமான வழிகள் குறித்த பட்டியல் ஒன்றையும் பொலிஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri