சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண உத்தரவிட்டுள்ளார்.
காலி மற்றும் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளராக இருந்த காலத்தில் அவர் மற்றொரு நபரின் பெயரில் 3 வங்கிக் கணக்குகளை திறந்து குற்றவாளிகளிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிச்சலவை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கைகள்
பொலிஸ் திணைக்களத்தின் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கடமையாற்றி வருகின்றார்.
இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சதீஸ் கமகேவிடம் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மோசடிகள் தொடர்பிலான சில குற்றச்சாட்டுக்களை மையமாகக் கொண்டு இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
