அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்! அமைச்சர் பிமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன் சென்று ஆணையை கோரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீர்குலைக்கும் முயற்சி
ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் அரசாங்கத்தின் சொத்துக்கள் என்றும், ஆளும் கட்சிக்குள் எந்தப் பிரிவுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை விமர்சித்த அவர், அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்றும், அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நெருக்கடி
அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் சேறு பூசும் பிரசாரங்களைத் தொடரலாம், ஆனால் அது, அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பாதிக்காது என்று பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
ராஜபக்ச காலத்தில், பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, நாட்டில் நெருக்கடியை எதிர்பார்த்ததாக அமைச்சர் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
