வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் : வலியுறுத்தும் தமிழ் எம்.பி
திருகோணமலையில் வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(22) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது.
புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தின் பொழுது 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நெற் செய்கைக்குப் பயன்படுத்திய நிலங்களை நெற்செய்கைக்கு விடுவிக்கும்படி அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது வரையில் குறித்த ஆணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. “ ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல அரசாங்கம் முடிவு செய்தாலும் அரச அதிகாரிகள் அதனைச் செயற்படுத்துவதாக இல்லை.
கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை
இதன் மூலம் இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க விடாமல் தடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரா? என எண்ணத் தோன்றுகிறது.
அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது.
எனவே கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் பயிர் செய்த நிலங்களையும், நீர் நிலைகள் அமைந்துள்ள நிலங்களையும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையையும் விரைவாக விடுவித்து நீர்ப்பாசனத் திட்டங்களைச் சீர்செய்து நாட்டின் நெல் உற்பத்தியையும் கால்நடைகளின் வளத்தையும் பெருக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு
அதேவேளை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் முதன்மையான சிக்கலாக மேய்ச்சல் தரைப் பிரச்சினை காணப்படுகின்றது.
வனவிலங்குத் துறையானது மரபு வழியாகக் கால்நடை வளர்ப்பாளர் பயன்படுத்தி வந்த அங்கோடை, மாவிலாறு பகுதி உள்ளிட்ட மேய்ச்சல் தரைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, இந்த இடத்தில் காட்டுவிலங்குகள் மட்டும் மேயலாம். ஆனால் வீட்டு விலங்குகள் மேயமுடியாது என தடுத்து வருகின்றது.
2008ஆம் ஆண்டில் 600 கால்நடை வளர்ப்பாளர்களும் 28,000 கால்நடைகளும் வெருகல் கோட்டத்தில் காணப்பட்ட வேளையில், போதிய உணவு இன்றி நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆயிரம் கால்நடைகள் இன்று இறந்து போயுள்ள சூழலில், இப்பொழுது 15,200 கால்நடைகள் மட்டுமே எஞ்சி உள்ளன.
கால்நடைகளின் இழப்பிற்கும், கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதார இழப்பிற்கும் பொறுப்பு கூறுவது யார் ? இத்தகைய சிக்கல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகமம், கிண்ணியா, குச்சவெளி, மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து 1985ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் பயிர் செய்த நிலங்களையும், நீர் நிலைகள் அமைந்துள்ள நிலங்களையும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையையும் விரைவாக விடுவித்து நீர்ப்பாசனத் திட்டங்களைச் சீர்செய்து நாட்டின் நெல் உற்பத்தியையும் கால்நடைகளின் வளத்தையும் பெருக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
